search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா விற்பனை"

    • 2021-ம் ஆண்டு முதல் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது.
    • போதை மாத்திரைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் கடத்தப்படும் கஞ்சா பொட்டலங்களை ரகசிய தகவலின் பேரில் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டு வருகிறது. இப்படி வாகன சோதனையின் மூலமாக போதைப்பொருட்கள் பிடிபடுவதால் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி சென்னையில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    படித்த இளைஞர்களும் இதில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். கூரியர் சர்வீஸ் மூலமாக இந்த மாத்திரைகளை போதை கும்பலிடம் இருந்து குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி சப்ளை செய்து வருகிறார்கள். மருத்துவத் துறையில் தூக்கமின்மை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளாக பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை மருந்து சீட்டுகள் இல்லாமல் கொடுக்கக்கூடாது.

    இதுதொடர்பாக போலீசார் அனைத்து மருந்து கடைகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். இதனால் மருந்து கடைகளில் இந்த போதை மாத்திரைகளை நேரடியாக வாங்குவது சிரமமான விஷயமாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் சட்ட விரோதமாக இந்த போதை மாத்திரைகள் பார்சல்கள் மூலமாக அனுப்பப்பட்டு சென்னையில் கல்லூரி மாணவர்கள், வாலிபர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது என மருந்து கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, டாக்டர்களின் பரிந்துரை மருந்து சீட்டு இல்லாமல் மேற்கண்ட மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்கிற சட்டத்தையும் மீறி போதைக்காக மாத்திரைகளை ஆன்லைனில் விற்று வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மற்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும்போதும் மது குடித்த பிறகும் தலை சுற்றல் உள்ளிட்ட போதைக்கான அறிகுறிகள் காணப்படும் என்றும் ஆனால் இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதால் அதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இருக்காது. உள்ளுக்குள் இருந்தே இந்த போதை மாத்திரை வேலை செய்யும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் போதை மாத்திரைகளை பயன்படுத்தி இருப்பவர்களை வீட்டில் இருக்கும் பெற்றோரால் கூட கண்டுபிடிக்க முடியாது என்பதால் இளைஞர்கள் அதிக அளவில் அதனை பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. இப்படி சென்னை மாநகரில் சத்தம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் போதை மாத்திரைகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிக அளவில் பிடிபட்டுள்ளன. 23 வழக்குகள் போடப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த 40 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போதை மாத்திரைகளை வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2021-ம் ஆண்டு முதல் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது. இதுவரை 1243 வழக்குகள் போடப்பட்டு 2423 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக போதை மாத்திரைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது. போதை மாத்திரைகளை பொடியாக்கி அதனை தண்ணீரில் கரைத்து நரம்பு வழியாக ஊசி மூலம் உடலில் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை ஏதாவது ஒரு இடத்தில் இருந்தே பயன்படுத்தி விடவும் முடிகிறது. இப்படி போதை மாத்திரைகள் சென்னை மாநகர இளைஞர்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரும் நிலையில் அதனை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த தளவாய்புரம் பகுதியை சேர்ந்த காசித் துரை தலைவனார் (வயது 23), தூத்துக்குடியை சேர்ந்த முத்து கல்யாணி(22), கீழப்புதூரை சேர்ந்த லட்சுமணகுமார் (26), ராம்குமார்(27), சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த கலைச்செல்வன்(19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த சுமார் 7½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறுவன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கிச்சா விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.
    • உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் திருவள்ளுவர் காலனி 63-வது தெருவில் வசித்து வருபவர் சதீஷ். இவரது வீட்டில் நேற்று இரவு 2 மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசப்பட்டுள்ளது. இதில் பால்கனி பகுதி தீப்பிடித்து எரிந்தது.

    இது தொடர்பாக கே.கே. நகர் போலீசில் சதீஷ் புகார் அளித்தார். அதில் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்பீடு ஹரீஸ் என்பவர் தனக்கு இன்ஸ்டாகிராமில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவர்தான் மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மது பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி வீட்டின் பால்கனியில் வீசி சென்ற ஹரீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சதீஷ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    சதீசும், ஹரீசும் நண்பர்களாக இருந்து பிரிந்துள்ளனர். இருவருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    முதலில் நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் பிரிந்துள்ளனர். சதீசின் கூட்டாளியான கிச்சா என்பவர் கடந்த ஜூன் மாதம் ஹரீசை தாக்கி காயப்படுத்தி உள்ளார். பின்னர் கிச்சா விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.

    இதன் பிறகு ஹரீஸ், சதீசை அழைத்து நீ சொல்லித்தான் கிச்சா என்னை தாக்கினார். தற்போது உன்னுடன் யாரும் இல்லை. உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்து மண்ணெண்ணெய் பாட்டில்களும் ஹரீஸ் வீசி இருப்பது தெரிய வந்துள்ளது.

    18 வயதே ஆகும் ஹரீஸ் மீது கொலை மிரட்டல் வழக்கு இருக்கும் நிலையில் 19 வயது சதீஷ் மீது 3 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போரூர்:

    சென்னை கே.கே நகர் பொப்பிலி ராஜா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கணேஷ் உள்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து அவரது தந்தை காவலாளியாக வேலை பார்த்து வரும் கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ஆகாஷ் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்ததும், சஞ்சய் குறும்படங்களை இயக்கியிருப்பதும் தெரிந்தது.
    • குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யவும், கஞ்சாவை புகைக்கவும் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபாரத் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆகாஷ்(24), சஞ்சீவ்(25), சஞ்சய்(24), என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் ஆகாஷ் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்ததும், சஞ்சய் குறும்படங்களை இயக்கியிருப்பதும் தெரிந்தது. நண்பர்களான 3 பேரும் கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அதிகம் பணம் சம்பாதிக்கும் ஆசையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யவும், கஞ்சாவை புகைக்கவும் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.

    அவர்கள் வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் சென்ற காவலரைத் தான் கஞ்சா கும்பல் கத்தி முனையில் விரட்டியுள்ளது.
    • தமிழக காவல்துறை கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 என நடத்தி வருகிறது. ஆனாலும், கஞ்சா வணிகம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த கஞ்சாவுக்கு அடிமையான மூன்று இளைஞர்கள், அங்கு நடந்த கோவில் திருவிழாவில் திருமாவளவன் என்பவரை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் சென்ற காவலரைத் தான் கஞ்சா கும்பல் கத்தி முனையில் விரட்டியுள்ளது.

    தமிழக காவல்துறை கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 என நடத்தி வருகிறது. ஆனாலும், கஞ்சா வணிகம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது; கஞ்சா போதையில் காவலரையே துரத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால் காவல்துறையினர் நடத்தும் கஞ்சா வேட்டையால் என்ன பயன் என்று தெரியவில்லை.

    அண்மையில் நடைபெற்ற "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு'' என்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைபொருட்கள் ஒழிப்பில் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று கூறினார். அவர் உண்மையாகவே சர்வாதிகாரியாக மாறி கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.
    • 3 பேரும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிந்தது.

    பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், வடபழனி, கே.கே. நகர், கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த அஜய், பூந்தமல்லி, சுமித்ரா நகர் 3-வது தெருவை சேர்ந்த மரிய அந்தோணி செல்வம், மற்றும் போரூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு ஆகியோர் பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைதான விஷ்ணு சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் நேற்று இரவு சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பார்சம் பேட்டை அருகே ன சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் இடையன்பட்டி பகுதியைச் சேர்ந்த நெல்சன் மண்டேலா (வயது 25) என்பதும், கையில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதேபோல் இடையும் பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் (23) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைதானவர்களிடம் இருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜராம் தலைமையில் தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் மகாலிங்கம், செந்தில், சாமுவேல், முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மீனவர் காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது21), வண்ணார் தெருவை சேர்ந்த உதயகுமார் (24), கீழசண்முகபுரம் பகுதியை சேர்ந்த விகாஷா (25) மற்றும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (32) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட லோகேஸ்வரன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 4 வழக்குகளும், உதயகுமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சின்னமனூர் பகுதியில் அதிகாலையிலேயே மது, கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    • மாணவர்களை குறிவைத்து கள்ளத்தனமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் பகுதியில் அதிகாலையிலேயே மது, கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதிைய சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில்,

    ெபாதுமக்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். ஆனால் பூங்காவில் பல இடங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.

    அங்கு கள்ளத்தனமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது. இதனால் பெரியவர்கள் உள்பட நடைபயிற்சி செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குடிேபாதையில் சுயநினைவின்றி சாலையிலேயே படுத்து உறங்கும் குடிமகன்கள் பொதுமக்களிடம் தகராறிலும் ஈடுபடுகின்றனர். சின்னமனூர் பகுதியில் போன் செய்தால் வீடு தேடி வந்து மது, கஞ்சா சப்ளை செய்து வருகின்றனர்.

    பெரியவர்கள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் இயங்கி வருகிறது. இதனால் சிறுவயதிலேயே வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். எனவே போலீசார் மது, கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பூங்காவை சீர் செய்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    • போலீசார் சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஏரிக்கரை அருகே செல்லியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து மகன் ஆதிகேசவன் (வயது 22) என்பதும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆதி கேசவன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஆதிகேசவனை கைது செய்தனர். அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். ஆதிகேசவன் மீது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தலைவாசல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய உதயசூரியனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    திருப்பதி மாவட்ட எஸ்.பி. பரமேஸ்வர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று திருப்பதி ரூரல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தனபல்லி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.

    மேலும் இருவரும் திருப்பதியில் உள்ள சட் டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இச்சாபுரம் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா வழக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று திருப்பதி ரூரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவ பிரசாத் தெரிவித்தார்.

    ×